ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியில் மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், பில் சால்ட், ரீஸ் டாப்ளே மற்றும் மார்க்வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.