சாலையில் வாகனம் ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவதும், கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதும் மிக அவசியம். இதை அலட்சியப்படுத்துவதால் தான் பல சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப்பாங்கான சாலைகளில் வளைவுகள் இருக்கும்போது மிக கவனமாகச் செல்ல வேண்டும்.

ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பைக் ஓட்டுநர் வளைவில் கூட வேகத்தைக் குறைக்காமல் அதிவேகமாகச் சென்று, விபத்தை ஏற்படுத்தியிருப்பது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்திருந்த நபரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் @anupamx9ce என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. “விபத்து வளைவால் ஏற்படவில்லை, அதிவேகத்தால் ஏற்பட்டது; சாலையில் வேகத்தை விடப் பொறுப்புதான் முக்கியம்” என்ற எச்சரிக்கையுடன் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

“>

 

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உயிருக்கே ஆபத்து, இவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்” என்று தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய விபரீதங்கள் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு வாகன ஓட்டியும் சாலையில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.