வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையடுத்து  தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் திரிஷா 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு லியோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ‘லியோ’ படத்தின் புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புரோமோ வீடியோ வெளியாகி 24 மணிநேரத்தில் 27 மில்லியன் (2.7 கோடி) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமின்றி 1.4 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. ஆனால், படம் LCU-க்குள் வருமா, வராதா என ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.