பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ஷாரூக்கானிடம் பதான் படத்தின் உண்மையான வசூல் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷாருக். ‘5000 கோடி அன்பு, 3000 கோடி பாராட்டு, 3250 கோடி அணைப்பு, 2 பில்லியன் புன்னகை, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்று பதிலளித்துள்ளார். ஷாரூக் கானின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பதான்’ உலகம் முழுவதும் *725 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.