வலிமை, நேர்கொண்ட பார்வை திரைப்படங்களுக்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது துணிவு படத்தில். ஜனவரி 11ஆம் தேதி இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக திட்டமிடப்பட்டது.

பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்சினையால் இந்த படத்தில் இருந்து அஜித் விலகுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய பக்கத்தில் ஏகே 62 படத்தினை நீக்கி உள்ளார். மேலும் தன்னுடைய கவர் போட்டோவையும் மாத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் நெவர் கிவ் அப் என்ற வாசகம் உள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் ஏகே62 படத்தில் இருந்து விலகுவது உறுதியாகி உள்ளது.