தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டு கொடுக்க மாட்டார். ஏனென்றால் அவரது படங்களில் அவருக்கென தனி ஸ்டைல் இருக்கும். அது மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் படம் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் ஹைலைட்டாக இருப்பார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பார்த்து ரஜினிக்கு நிறைய ஏக்கங்கள் உருவாகியுள்ளதாம்.

அதனால் தான் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தையும் பான் இந்தியா திரைப்படமாக ரஜினி கொண்டு செல்ல வேண்டும் என பல பிரபலங்களை இந்த படத்தில் ரஜினிகாந்த் சேர்த்துள்ளார். அதாவது கனடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் போன்றவர்களும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. பேருக்கு தான் ரஜினி அவர்களை பயன்படுத்தி உள்ளார் என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது.