விக்ரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களின் பாராட்டுகளை தட்டிச் சென்றவர் ஏஜென்ட் டீனா. இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக டான்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். லோகேஷ் தான் இவருக்கு முதன் முதலாக விக்ரம் படத்தில் நடிகையாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பிற்காக படக் குழு காஷ்மீர் சென்றுள்ளது. அப்போது விமானத்தில் செல்லும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஏஜென்ட் டீனாவும் இடம்பெற்றதால் தளபதி 67 படத்தில் இவர் நடிக்கின்றார் என்று ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர்.