துலாம் ராசி அன்பர்களே,

இன்று மனதில் ஏற்பட்ட ஆசைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆசைப்பட்ட பொருளை வாங்க உற்சாகமாக ஈடுபடுவீர்கள். செலவுகள் ஒரு பக்கம் இருக்கும். கட்டுக்கடங்காத பணவரவு ஒரு பக்கம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அனைத்து விதமான நலன்களும் தேடிவரும்.

கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். இன்று பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள்.

எல்லோரும் பாராட்டும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். இன்று மாணவர்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். கல்வியில் முழு அக்கறையுடன் செயல்படுவீர்கள். எந்த செயலிலும் சிந்திக்காமல் ஈடுபட வேண்டாம். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்