விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நல்ல விஷயங்களுக்கு துணை நிற்பீர்கள். கெட்ட சகவாசங்களை அடியோடு விட்டு விடுவீர்கள். யாரையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். மனபதட்டம் ஏற்பட்டாலும் சரியாகும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். பொன் பொருளால் யோகம் ஏற்படும்.

தொழில்நுட்ப அறிவைக் கொண்டு உயர்வை அடைவீர்கள். அக்கம் பக்கத்தில் அனுசரித்து செல்லுங்கள். வாகனத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இன்று பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தைரியம் அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் பொறுமையாக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்துவீர்கள். படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வெற்றி கிடைக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்