மேஷ ராசி அன்பர்களே,

இந்த நாள் பிடித்தமான இடத்திற்கு சென்று வரக்கூடிய சூழல் இருக்கிறது. இன்று உங்கள் பேச்சில் மங்களத்தன்மை நிறைந்த காணப்படும். தொல்லை கொடுத்தவர்கள் இடம் மாறி சொல்வார்கள். தொழில் உற்பத்தி பணி சிறப்பாக இருக்கும். பணவரவை சேமிப்பீர்கள். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். தடைகளை தாண்டி தான் இன்று முன்னேற முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது என்று குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கடின உழைப்பால் வெற்றி பெற முடியும். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள். இன்று பெண்கள் ஆர்வமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தொலைந்த பொருள் கையில் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். முயற்சி செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கலாம். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்