ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு தயவு செய்து செல்ல வேண்டாம். சிரமங்களை தாமதம் இன்றி சரி செய்ய வேண்டும். எதற்கும் அச்சப்பட வேண்டாம். குழப்பம் அடைய வேண்டாம். நல்லவர்களின் நட்பு கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. சிரமம் எடுத்து சில பணிகளை முடிக்க வேண்டியது இருக்கும்.

உழைப்பால் உயரும் நாள் என்றே சொல்ல முடியும். பண வரவு சீராக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். திறமையால் வெற்றி பெற முடியும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். இந்த இனிய நாளை அற்புதமாக கொண்டாட முடியும். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடுமுறையிலும் படிப்பது நல்லது. இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்