மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். கவலை மறந்து செயல்படலாம். நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவது நல்லது. இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும். தொழில் வியாபார வளர்ச்சி நிலை சிறப்பாக இருக்கும். உபரி பண வருமானம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றும்.

பிள்ளைகளிடம் பேசும் போது கவனமாக இருங்கள். உழைப்பிற்கான ஊதியம் குறைவாகத்தான் கிடைக்கும். பெற்றோரிடம் கோபப்பட வேண்டாம். தாய் தந்தையாரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை விரயம் செய்ய வேண்டாம். இறைவன் வழிபாட்டில் மட்டும் நம்பிக்கை கொள்ளுங்கள். பெண்களுக்கு செய்யும் பணிகளில் நல்ல பெயர் கிடைக்கும். சுறுசுறுப்பாக எதிலும் ஈடுபடுவீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் மனதில் தோன்றும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்