கடகம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட குறுக்கீடுகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் சூழல் உள்ளது. உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். சில விஷயங்கள் காலதாமதமாக நடக்கும்.

இன்று விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழலை சந்திக்க வேண்டியது இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும்போது கவனமாக இருங்கள்.

பெண்கள் இன்று பொறுமையாக பேசுவது நல்லது. சமையலின் போது கவனம் தேவை. இன்று மாணவர்கள் சக மாணவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். கல்வியில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்