சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வாக காணப்படும். சிலர் பரிகாசத்துடன் பேசுவார்கள். அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. தொழில் போட்டிகள் ஓரளவு விலகி செல்லும். கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடிவிடும். பண வரவு சீராக இருக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். இன்று பெண்கள் சமையலின் போது கவனமாக இருங்கள். சில பணிகள் கால தாமதமாக நடக்கும். இன்று யோசித்து எதிலும் ஈடுபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விடுமுறை நாளை தேர்வுக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வில் வெற்றி பெற முழு முயற்சி எடுங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்