தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணி உடன் விண்ணப்ப கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் தற்போது ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறகு துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் இந்த படிப்புகளில் சேர்வார்கள் என்பதால் இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.