இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மகன் கரன் சித்துவின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. கரண் சித்தூர் பாட்டியாலாவை சேர்ந்த இனயத் ரந்தாவா என்ற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி கங்கை கரையில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.