மயிலாடுதுறையில் 134 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக நடைபெற்று வரும் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் திருவிழாவில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர் ஒருவரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாசி மாதத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவத்தில், சுமார் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். அப்போது வரிசையில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த த.வெ.க. கட்சிக் கொடியை வெளியே எடுத்து, கையில் ஏந்தியபடி “தளபதி” வாழ்க என முழக்கமிட்டுத் தீக்குண்டத்தில் இறங்கினார்.
TVK Flag | தவெக கொடியுடன் தீ மிதித்த இளைஞர் – டென்ஷனாகி பிடுங்கிய கோயில் நிர்வாகத்தினர் #tvkflag #Mayiladuthurai #viralvideo #thanthitv pic.twitter.com/GNrEhiI3RQ
— Thanthi TV (@ThanthiTV) February 24, 2026
“>
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அங்கிருந்தவர்கள், உடனடியாக அந்த இளைஞரின் கையிலிருந்த கொடியைப் பிடுங்கி எறிந்ததால் அந்த இடமே போர்க்களமானது போலக் காட்சியளித்தது. ஆன்மீக விழாவில் அரசியல் கொடியைப் பயன்படுத்தியதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
