மலையாளத் திரைப்பட உலகில் ‘வழக்கு’, ‘சோழா’ உள்ளிட்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற சனல் குமார் சசிதரன் மீது நடிகை ஒருவர் கடந்த ஜனவரியில் புகார் அளித்திருந்தார். ஆன்லைன் மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் அப்போது அமெரிக்காவில் இருந்ததால், அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனால், அவர் இந்தியாவுக்கு வரும்போது கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (செப்.07) அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த இயக்குநர் சனல் குமார் சசிதரன் மும்பை விமான நிலையத்திலேயே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கைது தகவல் பரவியதும், மலையாளத் திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.