தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவருக்கு துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை விஜயின் புகைப்படத்தை காண்பித்து அவரிடம் தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகை திரிஷா விஜயின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். அதற்கு அவர் தகுதியானவர் என்று கூறினார்.

நடிகை திரிஷா விஜய் பற்றி பேசும்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் முகத்தில் சிரிப்புடன் இருந்தது. குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் மற்றும் திரிஷா ஒரே விமானத்தில் சென்றது சர்ச்சையாக பேசப்பட்டது. அதே நேரத்தில் விஜயின் மனைவி சங்கீதா விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு செய்தி பரவி வரும் நிலையில் திரிஷா மற்றும் விஜய் குறித்த கிசுகிசுகளும் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. மேலும் இந்த நிலையில் விஜய்க்கு திரிஷா வாழ்த்து கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.