ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரை தொடர்ந்து 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது கேரளா மாநிலத்தின் மிகவும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஓணம் கொண்டாடப்படும் அன்று மக்கள் தங்களது இல்லங்களில் கடவுளை வரவேற்கும் விதமாக வாசலை பூக்களால் அலங்கரித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது வழக்கம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jayaram (@actorjayaram_official)

இந்நிலையில் வாசலில் போடப்படும் கோலங்களை பெண்கள் போடுவது தானே இயல்பு. ஆனால் பிரபல நடிகர் ஜெயராமன் தனது வீட்டின் முன்பு அவரே கோலம் போடுகிறார். இதனை ஏனோ தானோ என்று செய்யாமல் மிகுந்த கவனத்துடன் அழகாக கோலமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.