பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மகனும், திரைப்படப் பாடகருமான சரண், வாடகை இல்லம் தொடர்பான பிரச்சனையால் சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: “சென்னை சாலிகிராமம், சத்யா கார்டன் பகுதியில் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி வீடு உள்ளது. அந்த வீட்டை, சினிமா உதவி இயக்குநராக உள்ள திருஞானம் என்பவருக்கு மாதம் ரூ.40,500-க்கு வாடகைக்கு கொடுத்திருந்தேன். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் ரூபாயை முன்பணம் (அட்வான்ஸ்) ஆகவும் பெற்றேன்.
ஆனால், கடந்த 25 மாதங்களாக அவர் எந்தவிதமான வாடகையும் செலுத்தவில்லை. இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்டபோது, அவர் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது வீட்டையும், நிலுவையில் உள்ள பணத்தையும் மீட்டுத் தர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த புகாரை அடுத்து, கே.கே.நகர் போலீசார், பிரச்சனை தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளார்கள்.
