பாம்பு என்ற பெயரைப் படித்தாலே பலருக்கும் உடல் நடுங்கும் நிலையில், பெண் ஒருவர் எவ்வித பயமும் இன்றி மிக நீளமான பாம்பு ஒன்றை லாவகமாகப் பிடித்து மீட்பு செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சுற்றிலும் இருக்கும் ஆண்கள் பயந்து நடுங்கி தூரமாய் நின்று தங்களது மொபைல் கேமராவில் வேடிக்கை பார்க்க, அந்தப் பெண் மட்டும் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் தைரியமாக அந்தப் பாம்பைக் கையாள்கிறார்.
பார்ப்பதற்குத் திரைப்படம் போன்ற ஒரு பிரம்மாண்ட காட்சியைத் தரும் இந்த சம்பவத்தில், சுமார் 5 அடி நீளமுள்ள அந்தப் பாம்பு பெண்ணின் உடல் மீது நெளிந்து ஏறியபோதிலும், அவர் சிறிதும் பின்வாங்காமல் கூலாக அதனைக் கட்டுப்படுத்தி ஒரு பிளாஸ்டிக் டப்பாவிற்குள் அடைத்து பத்திரமாக மீட்கிறார். பெண்ணின் முகத்தில் துளிகூட பயம் இல்லாததைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
यह दीदी कितनी बहादुर हैं।
इनको थोड़ा सा भी डर नहीं लग रहा है।
यह वास्तव में धुरंधर है। pic.twitter.com/PV9DIEHEo1— Pooja dhakad ❤️ (@Poojadhkd) June 7, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் துணிச்சலைக் பாராட்டிப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், அந்தப் பாம்பு விஷமற்றது என்பதால் தான் அவர் இவ்வளவு தைரியமாக இருக்கிறார் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். “இது விஷமுள்ள பாம்பாக இருந்திருந்தால் இந்நேரம் அக்கா மருத்துவமனையில் இருந்திருப்பார்” என்று ஒரு பயனர் கிண்டலாகக் கூற, மற்றொருவரோ “அவருக்குப் பாம்பு பிடிக்கும் சரியான உத்தி தெரிந்திருக்கிறது, அதனால்தான் இவ்வளவு எளிதாக மீட்கிறார்” எனப் பாராட்டியுள்ளார்.
மேலும், பாம்புகளைப் பற்றி நன்கு அறிந்த பயனர் ஒருவர், “இது பார்ப்பதற்குப் பயங்கரமான நீளமும் தடிமனும் கொண்டதாக இருந்தாலும், இது ‘சாரைப்பாம்பு’ வகையைச் சேர்ந்தது; இதில் விஷம் கிடையாது, கடித்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை” என்று விளக்கமளித்துள்ளார். விஷமுள்ளதோ இல்லையோ, ஆண்கள் ஓடி ஒளிந்த இடத்தில் ஒரு பெண் காட்டிய இந்த அசாத்திய தைரியம் தற்போது இணையத்தில் கோடிக்கணக்கான பார்வைகளைக் குவித்து வருகிறது.
