இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழக அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகை, தஞ்சை, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது.