எஸ்.பி.ஐ சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, பாஜகவுக்கு அதிக நன்கொடையளித்த நிறுவனங்களில், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் (ரூ.584 கோடி) முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய 2. Qwik Supply -ரூ.395 கோடி, 3.வேதாந்தா குழுமம் – ரூ.226 கோடி, 4. பார்தி ஏர்டெல் – ரூ.197 கோடியை நன்கொடையாக அளித்துள்ளன.