கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை அவருக்கு வழங்குவதற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். டி.எம்.கிருஷ்ணா, பெரியாரை ஆதரிப்பவர் என்பதாலேயே பராம்பரிய இசைக்கலைஞர்களிடமிருந்து இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்ற கருத்து நிலவுகிறது.