திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்துவந்த இரண்டு சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சமீப காலமாக இவர்களது வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இரண்டு சகோதரிகளின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

சடலங்களைக் கைப்பற்றிய போலீசார், அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது உணவின்றி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.