ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வில் டிஜே இசையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த ஒரு நபர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன மேடையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அவர், ஒரு சில நொடிகளிலேயே நிலைதடுமாறி தரையில் விழுந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ஒட்டுமொத்த நெஞ்சை உருக்கும் காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சமீபகாலமாக உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகின்றன.

“>

இந்நிலையில் நடுத்தர வயதுடையவர்களுக்குத் திடீர் மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், உடல்நலம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.