முன்னாள் நிகலோடியன் குழந்தை நட்சத்திரமான டைலர் சேஸ், கலிபோர்னியா வீதிகளில் வீடற்ற நிலையில் தவித்து வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘நெட்ஸ் டி கிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’ போன்ற தொடர்களின் மூலம் பிரபலமான அவர், தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்படுகிறார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டைலரின் தாயார், தனது மகனுக்கு தற்போது தேவைப்படுவது பணமல்ல, முறையான மருத்துவ சிகிச்சையும் மனநல ஆலோசனையுமே என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

“>

மேலும் அவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய தாய், அவரை இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீட்கத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் திரையில் மின்னிய நட்சத்திரம் இன்று தெருவோரம் தஞ்சமடைந்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.