திருமண வைபவங்கள் களைகட்டியிருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணக்கோலத்தில் இருந்த மணமகன், சடங்குகள் தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு திடீரென உயிரிழந்தது இரு வீட்டாரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மகிழ்ச்சி பொங்க வேண்டிய திருமண வீடு, ஒரு நொடியில் மரண ஓலத்தால் நிறைந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்த துயரமான சூழலில், மணமகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு கடினமான முடிவு எடுக்கப்பட்டது. உயிரிழந்த மணமகனின் தம்பி தனது அண்ணனை இழந்து துக்கத்தில் வாடிய போதிலும், குடும்பத்தின் கௌரவத்தையும் மணமகளின் வாழ்க்கையையும் காக்க முன்வந்தார். தனது அண்ணனுக்குப் பதில், அவர் அந்தப் பெண்ணிற்கு மணமாலை சூட்டி திருமணத்தை முடித்து வைத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Aradhya (@insta__aradhya)

“>

இந்நிலையில் அழுதுகொண்டே அவர் மணமகளுக்கு மாலையிட்ட உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விதியின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்து போன இந்த திருமணச் சடங்கு, இணையவாசிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.