தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7:10 மணிக்கு விமானம் மூலம் கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே மூன்று முறை ஆளுநரைச் சந்தித்துத் தனது தரப்பு வாதங்களை முன்வைத்துள்ள நிலையில், ஆளுநரின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா அல்லது அடுத்தகட்ட ஆலோசனைகளுக்காகக் கேரளா செல்கிறாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஒருபுறம் அரசியல் கட்சிகள் மெஜாரிட்டியை நிரூபிக்க மல்லுக்கட்டி வரும் சூழலில், ஆளுநரின் இந்தத் திடீர் பயணம் தமிழக அரசியலில் மேலும் ஒரு சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது.
