தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை மூன்று முறை ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிவிட்டார்.

வழக்கமாக ஒரு கட்சித் தலைவர் ஆளுநரைச் சந்திப்பது ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரத்தான் இருக்கும் என்பதால், அரசியல் களம் செம சூடாகக் காணப்படுகிறது.

ஆனால், இத்தனை முறை சந்திப்பு முடிந்தும், ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

ஒருபுறம் விஜய் தரப்பு அடுத்தடுத்த நகர்வுகளில் தீவிரம் காட்டினாலும், ஆளுநர் தரப்பு இன்னும் ‘வெயிட்டிங் லிஸ்டில்’ வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

டெல்லியின் சிக்னலுக்காக ஆளுநர் காத்திருக்கிறாரா அல்லது சட்ட நடைமுறைகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பது புரியாமல் தமிழக அரசியல் வட்டாரமே இப்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.