தமிழக அரசியலில் ‘பூகம்பம்’ கிளப்பும் வகையில், தவெக தலைவர் விஜய்யை அதிமுகவின் முக்கிய புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாஜிக்கள் சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் எடப்பாடி பழனிசாமி கூடாரத்தையே கதிகலங்க வைத்துள்ளது.

ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட விஜய் தரப்பு மும்முரமாகக் காய்களை நகர்த்தி வரும் வேளையில், அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்படும் கொங்கு மற்றும் வடக்கு மண்டலத் தளபதிகள் பனையூர் நோக்கிப் படையெடுத்து வருவது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மெகா திருப்பமாகும்.
சி.வி சண்முகம் ஏற்கனவே ஆதரவு அளிக்க முன்வந்த நிலையில், இப்போது ‘ஹெவி வெயிட்’ தலைவர்களும் அணிவகுத்து நிற்பதால், அதிமுகவின் மொத்தப் பலமும் விஜய்யின் பக்கம் சாய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அதிரடித் திருப்பங்களால் கோட்டை அரியணை யாருக்கு என்பதில் இருந்த இழுபறி நீங்கி, விஜய்யின் முதல்வர் கனவு இப்போது மிக நெருக்கமான தூரத்திற்கு வந்துவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
