தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி, அக்கட்சியினர் ஆவேசமடைந்துள்ளனர்.

ஆளுநர் திட்டமிட்டே காலந்தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டிய தவெக தொண்டர்கள், கடலூர் மாவட்டம் திட்டைக்குடி பெண்ணாடம் பகுதியில் அதிரடியாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் கட்சி கொடிகளுடன் ஆளுநரை கண்டித்து முழக்கமிட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விஜய் தரப்பிலிருந்து அடுத்தடுத்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தொண்டர்களின் இந்தப் போராட்டக்களம் தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது.