தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பிடிக்க பெரும் போராட்டமே நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி நடிகர் மன்சூர் அலிகான் நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லம் முன்பு திடீரெனத் தோன்றி கொந்தளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விஜய் இப்போது இருக்கும் நிலையைப் பார்க்கும் போது எனக்கு ரத்தம் கொதிக்கிறது; என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை” என உணர்ச்சிவசப்பட்ட மன்சூர் அலிகான், ஆளுநர் தரப்பிலிருந்து தவெக-வுக்குச் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததும், அடுத்தடுத்து வைக்கப்படும் போலி கையெழுத்துப் புகார்களும் விஜய்யை மிகவும் காயப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

நீலாங்கரை வீதிக்கு வந்த மன்சூர் அலிகான், “நேர்மையாக அரசியல் செய்ய நினைப்பவர்களுக்குத் தமிழகத்தில் இப்படியா நடக்கும்?” எனக் கோபமாகக் கேள்வி எழுப்பினார். எப்போதுமே கலகலப்பாகப் பேசும் மன்சூர் அலிகான், இன்று விஜய்க்காகப் பகிரங்கமாக வந்து ஆதரவு தெரிவித்ததோடு, எதிர்த் தரப்பினரின் செயல்களைச் சாடிப் பேசியது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>