தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலரும் கலந்துகொண்டு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்தனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ், மரகதம் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தப் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சி ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆளுநர் தரப்பிலிருந்து தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு வராத சூழலில், அதிமுகவினரின் இந்தத் திடீர் ஆலோசனை தமிழக அரசியலில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.