இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான சதத்தின் (101 ரன்கள்) உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களைக் குவித்தது.

இலக்கைத் துரத்திய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தபோதும், இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் 48.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் விறுவிறுப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியின் 42-வது ஓவரில் ஒரு சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை வீரர் சமிகா கருணாரத்னவை ரன் அவுட் செய்ய இந்திய வீரர்கள் செய்த முயற்சி, மூன்றாவது நடுவரின் முடிவால் நிராகரிக்கப்பட்டது.

“>

 

பந்து ஸ்டம்புகளைத் தாக்குவதற்கு முன்பே விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் அறியாமல் ஸ்டம்புகளைத் தட்டிவிட்டதால், அந்த அவுட் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்த ருதுராஜ் கெய்க்வாட், கள நடுவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.