திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் நாகமலை. இவரது மனைவி லதா. இவர்களது மகன் திருமூர்த்தி(30) சேரன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான நல்லெண்ணெய் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமூர்த்திக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆலையில்  உள்ள தரைமட்ட எண்ணெய் தொட்டியில் திருமூர்த்தி  தவறி விழுந்து பாதியளவு எண்ணெயில் மூழ்கிய படி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்த…