மதுரையில் நடைபெறவுள்ள தவெகவின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டிருந்த 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் கிரேன் மூலம் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென ரோப் அறுந்ததால் கொடிக்கம்பம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது.
அது அருகே இருந்த கார் மீது விழுந்ததில், வாகனம் அப்பளம்போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக அங்கு இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் ஓடிச் சென்று தப்பியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மாநாட்டு அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மதுரை தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு
#Madurai #TVK #Vijay #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/rXvM98jjxT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 20, 2025
“>
