காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல மெடிக்கல் உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா. நேற்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜீவா பங்கேற்றார். அப்போது பாடகர் வேல்முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை நடனமாட வருமாறு அழைத்தார். அங்கு சென்று ஜீவாவும் சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக தலையில் கை வைத்தபடி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஜீவா சரிந்து விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ஜீவாவை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீவா நடனமாடி கொண்டிருந்த போது மயங்கி விழுந்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.