தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு, விசிக, சிபிஎம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் விலகி வரும் சூழலில், “திமுக யாருடனும் கூட்டணியில் இல்லை, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்” என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிக்க வேண்டும் என திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே பேசிய ஆ.ராசா, அண்மைய தேர்தல் தோல்விகளை வைத்து ஒரு தலைவரை எடை போட்டுவிட முடியாது என்றும், தவெகவை நோக்கி இடதுசாரிகளும் மதிமுகவும் நகரத் தொடங்கியிருப்பது திமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், திமுக கூட்டணியே இல்லை என விமர்சித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் வைகோ ஆகியோரின் பேச்சுகளுக்குச் சாட்டையடி பதிலடி கொடுத்த அவர், திமுக யாரையும் நம்பி இல்லை என்றும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணத் தயாராக வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக முழங்கினார்.
