சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணிப் பரப்புரை மேடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே பிரேமலதா விஜயகாந்த் திமுக ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போதைய ஆட்சியின் மீது போதைப்பொருள் கலாசாரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் அதிகமாக இருப்பதாக அவர் வெளிப்படையாகப் பேசினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது இதை தவிற வேறென்ன குற்றங்கள் சொல்ல முடியும் இந்த ஆட்சியில்.. 🤡
– premalatha alias durandhar pic.twitter.com/IbBqSgvgq0
— Varsha (@VarshaDRaman) April 16, 2026
”அண்ணன் ஸ்டாலின் மீது மக்களுக்கு இந்த ஒரே ஒரு குறைதான் உள்ளது” எனக் குறிப்பிட்ட பிரேமலதா, மற்றபடி ஆட்சியில் வேறு குறைகள் சொல்ல முடியாது என்று கூறி மழுப்பினாலும், அவர் தொட்ட விவகாரங்கள் மேடையில் இருந்த திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கூட்டணி மேடையிலேயே ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டிய பிரேமலதாவின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
