NDA கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூடிய லட்சக்கணக்கான மக்களைக் கண்டு திமுக மிகுந்த பதற்றத்தில் உள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த அச்சத்தின் காரணமாகவே NDA கூட்டணியை ‘டப்பா இஞ்சின்’ என்று திமுகவினர் விமர்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். “டப்பா, டோப்பா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது; மக்களை ஏமாற்றும் அந்த வேலைகளை திமுக அரசுதான் செய்கிறது” என அவர் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், தமிழகத்தைத் துயரத்தில் ஆழ்த்தும் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
