தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், நடிகர் விஜய் தனது ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போனது தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக, இப்படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் வரும் என்று தான் முன்பே கணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரின் கஷ்டத்தை நினைத்து வருத்தப்படுவதாகவும், மௌனமாக இருந்த தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் அவரது பேச்சு அமைந்திருந்தது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.