பெரும்பாலானோர் தங்கள் அலுவலகப் பயணம் கடினமானது என்று நினைக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குஷி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் தொழில்நுட்ப ஊழியர், கடந்த ஐந்து மாதங்களாகச் தினமும் 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து லக்னோவில் உள்ள தனது பன்னாட்டு நிறுவன அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார்.
கான்பூரில் வசித்து வரும் இவர், தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையிலான தனது ஷிஃப்டுக்குச் சரியாகச் செல்ல, முதலில் ரயிலிலும், பின்னர் ஆட்டோ ரிக்ஷாவிலும் பயணித்துள்ளார். இந்தக் களைப்பூட்டும் பயணத்தின் மத்தியிலும், தனது தினசரி போராட்டத்தையும் கடின உழைப்பையும் “ஒரு கார்ப்பரேட் பெண்ணின் அன்றாட வாழ்க்கை, அலுவலகத்திற்காக தினமும் 200 கி.மீ.” என்ற தலைப்பில் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அவர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“>
அவரது இந்த நீண்ட பயணமும், விடாமுயற்சியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
