மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையில் நடந்த சம்பவம் குறித்து ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் வழக்கமான வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு பாம்பு ஊழியர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பாம்பைக் கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கவுண்டர்கள் மீது ஏறி பாதுகாப்புத் தேடினர். அந்த வீடியோவில், பாம்பு தரையில் சாதாரணமாக ஊர்ந்து செல்ல, ஊழியர்கள் பீதியுடன் ஓடுவதும், ஒரு சிலர் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதும் தெளிவாகக் காணப்படுகிறது.

“>

 

பின்னர், ஊழியர் ஒருவர் துடைப்பான்  பயன்படுத்தி பாம்பை மெதுவாக வெளியே தள்ளுவதையும் வீடியோ காட்டுகிறது. இந்தச் சம்பவம் பணியிடங்களில் வனவிலங்குகளின் எதிர்பாராத வருகை மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது.