திமுக சமூக வலைத்தள செயற்பாட்டாளரும் பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தள செயல் வீரர் இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரை இறந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.