தமிழகத்தில் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அதிமுக கூட்டணியிலும் ராமதாஸ் தரப்பைச் சேர்க்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இழுபறி நிலையைத் தொடர்ந்து, தவெகவுடன் கைகோர்க்க பாமக ஆர்வம் காட்டி வருகிறது.

இதுதொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வாயிலாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் அரசியல் நகர்வு தமிழகக் கூட்டணி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.