புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினத் தேநீர் விருந்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெறும் சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) மட்டும் பெறுவதோடு திருப்தியடையப் போவதில்லை என்றும், ஆட்சி அதிகாரத்தில் சமமான பங்கு பெற வேண்டும் என்பதில் தங்கள் கட்சி உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். பிப்ரவரி மாதத்தில் தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.