சசிகலா புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்திருப்பது குறித்துக் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், திடீர் இட்லி அல்லது சாம்பார் போல அவசரமாகத் தொடங்கப்படும் புதிய கட்சிகளால் தங்களது கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

வயலில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நல்ல நெல்மணிகளுக்குப் பதர்களால் எப்படித் தீங்கு ஏற்படாதோ, அதேபோல் இவர்களாலும் எந்த மாற்றமும் நிகழாது என்று அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

“>

 

மேலும், காக்கா மற்றும் குருவிகள் சில நெல்மணிகளைக் கொத்திச் செல்வதால் ஒட்டுமொத்த விளைச்சல் குறைந்துவிடாது என்பது போல, இத்தகைய புதிய முயற்சிகள் தங்களைப் பாதிக்காது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.