தமிழகத்தில் வசிக்கும் சுமார் 23 சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெலுங்கு கூட்டமைப்பு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் சி.எம்.கே. ரெட்டி, “கடந்த 12 ஆண்டுகளாகப் பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சித் திறன் மற்றும் தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்காகக் கொண்டுவரப்பட்ட சிறப்பான நலத்திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, தெலுங்கு பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் அதிமுக அரசு முன்னோடியாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைப் பெற்றுள்ள தெலுங்கு கூட்டமைப்பின் இந்த ஆதரவு, அதிமுக – பாஜக உள்ளடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் (NDA) தேர்தலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.